Advertisment

வீட்டு தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த பாண்டி சரக்கு

Advertisment

சீர்காழி அருகே வீட்டுத்தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த 805 லிட்டர் பாண்டிச்சேரி சாராயத்தையும், 1125 பாக்கெட் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. அவரது வீட்டு தோட்டத்தில் பாண்டிச்சேரி சாராயம் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கும், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கலை அதிரவன் மற்றும் சீர்காழி மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் செல்வி தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

சோதனையில் வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 கேன்களில் 805 லிட்டர் தண்ணீர் கலக்கப்படாத பாண்டிச்சேரி சாராயமும், 1125 சாராய பாக்கெட்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதனை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டின் உரிமையாளர் லட்சுமி, சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பாரதி உள்ளிட்ட இரண்டு பேரை கைதுசெய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் என்கிறார்கள் போலீசார்.

Pondicherry seerkazhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe