Advertisment

புதுச்சேரி  இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்பட 9 வேட்பாளர்கள் போட்டி! 

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் என மொத்தமாக 18 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

Advertisment

pondicherry election

இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி மன்சூர் முன்னிலையில் நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 11 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

அதையடுத்து மனுக்களை இன்று (03-10-2019) மாலை 3 மணிக்குள் வாபஸ் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பபெற்றனர். அதனையடுத்து 9 பேர் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர்

Advertisment
congress Election naam thamizhar nr congress Pondicherry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe