Advertisment

சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காதது குறித்து சபாநாயகர் விளக்கமளிக்க வேண்டும்... -நியமன எம்.எல்.ஏக்கள் பேட்டி

pondichery

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

புதுச்சேரி பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. ஆனால் இந்த நியமனம் விதிமுறைகளின்படி நடக்கவில்லை எனக்கூறிய சபாநாயகர் வைத்திலிங்கம், அவர்களுக்கு சட்டசபையில் இருக்கை ஒதுக்கவில்லை.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதுத்தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசு எம்.எல்.ஏ.க்களை நியமித்தது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனடியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதையடுத்து கடந்த முறை சட்டசபைக்குள் செல்ல முயன்ற நியமன எம்.எல்.ஏக்களை அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி நிருபர்களிடம், "நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு எந்தத் தடையும் விதிக்கவில்லை. எனவே புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கைகள் ஒதுக்க வேண்டும். சட்டப்பேரவைக்கு அவர்கள் செல்லலாம். அவர்களுக்கு அங்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்றால் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரலாம்" என்று கூறினார்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

அதையடுத்து நேற்று நியமன எம்.எல்.ஏக்கள் சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயரை சந்தித்து, உயர் நீதிமன்ற உத்தரவு நகலை கொடுத்து, தங்களை சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இன்று காலை நியமன எம்.எல்.ஏக்கள் மூவரும் பேரவைக்குள் செல்ல திட்டமிட்டனர். அதையடுத்து நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தது.

பேரவைக்கு வர நியமன எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் வைத்தியலிங்கம் அனுமதி மறுத்திருந்ததால் காவலர்கள் அனுமதிக்கவில்லை. அதேசமயம் சட்டமன்ற நுழைவு வாயில்முன் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். சிறிது நேரம் கழித்து போராட்டத்தை கைவிட்டு புறப்பட்டனர். அப்போது, “பேரவைக்குள் நுழைய அனுமதி மறுத்தது ஏன் என சபாநாயகர் விளக்க வேண்டும் என மாநில தலைவர் சாமிநாதன் கூறினார்.

Pondicherry-Assembly
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe