Pondicherry Assembly adjourned indefinitely again

Advertisment

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்குப்பின் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு பதவியேற்றது. இந்த கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு 26ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி, செப்டம்பர் 3ஆம் தேதிவரை நடைபெற்றது. அதன்பின்னர், சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான இரண்டாவது சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் முப்படைத்தளபதி பிபின் ராவத் மற்றும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நீட் விலக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, பேரவை தொடங்கிய 21ஆவது நிமிடத்திலேயே சட்டப்பேரவையை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.