புதுச்சேரி அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்டது ஆரோவில். அங்கு ஏராளமான வெளிநாட்டவர் வசித்து வருகிறார்கள்.

Advertisment

pondicherry arrest

அங்குள்ள திவான் கந்தப்பன் நகர் என்ற பகுதியில் நேற்று இரவு சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி ரியா அதின், காஞ்சிபுரம் டி.எஸ்.பி ஜூலியஸ் சீசர் ஆகியோர் தலைமையில் எட்டு பேர் கொண்ட தனிப் படையினர் ஒரு வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஆண், பெண் என ஆறு பேர் இருந்துள்ளனர். அவர்களில் உகாண்டாவை சேர்ந்த கக்கூ ஜஸ்ட் எக்வா (26) என்ற ஒரு பெண்ணையும், நைஜீரியாவை சேர்ந்த காட்வின் திக்கு (47) என்ற ஆணையும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisment

அவர்களிடமிருந்து கொக்கைன், அபின் போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே இப்பகுதியில் கடல்வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ள நிலையில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது.