Advertisment

புதுச்சேரியில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு - முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி! 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

Advertisment

pondicherrry CM order

"திருச்சியில் சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து, அதனை தமிழக அரசு காப்பற்ற பெரும் முயற்சி எடுத்தது. கோடிக்கணக்கான பேர்கள் அந்த குழந்தை காப்பாற்றப்படவேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அதிலிருந்து நாம் இரண்டு பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். ஒன்று, இதுபோன்று ஆழ்துளை கிணறுகளை கண்டு எடுத்து மூடவேண்டும். இன்னொன்று, இதுபோன்ற ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை புதிய தொழில்நுட்பம் கொண்டு மீட்டெடுக்க வேண்டும்.

Advertisment

சுர்ஜித் மரணம், இன்றைய தினம் நம்மையெல்லாம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்று புதுச்சேரியில் பயன்படாத, உபயோகத்தில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவு பிறப்பித்துளேன். வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு எங்கெல்லாம் உள்ளதோ அதனை உடனே மூட உத்தரவு பிறப்பித்துளேன்" என்று தெரிவித்தார்.

borewell narayansamy pondichery sujith
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe