Skip to main content

’விசிகவையும் - பாமகவையும் திமுக மோத விடுகிறது’- பாலு பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

 

பொன்பரப்பி கலவரம் தொடர்காக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.  அப்போது அவர்,   ‘’பாமகவிற்கு எதிராக விசிக தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறது.

 

b

 

 பொன்பரப்பியில் காலை 11 மணியளவில் செல்வ. விநாயகர் கோயில் அருகில் மோர் பானையை வைத்து விசிக பிரச்சாரம் செய்தனர்.  இதனால் மோர் பானையை அதிமுக கூட்டணி கட்சியினர் உடைத்தனர். மதியம் 2 மணியளவில் வீரபாண்டி என்கிற மாற்றுதிறனாளி தாக்கப்படுகிறார். சுப்ரமணியன், கமலகண்ணன் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். தனசுந்தரியை கொச்சையாக விமர்சித்தனர். இதுகுறித்து கேட்க சென்ற போது கற்களால் தாக்கப்பட்டனர். 

 

b

 

வைத்தி எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கிறார். திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் பார்வையிட சம்பவ இடத்திற்கு வருகிறார். விசிகவை ஊருக்குள் விடவில்லை என நியூஸ் 18 நிருபர் கலைவாணன் செய்தி வெளியிடுகிறார். அதனால் பொன்பரப்பியில் கலைவாணன் விசிகவினரால் தாக்கப்பட்டார். 

 

b


  இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்  போதெல்லாம் அதன்பின்னால் திமுக உள்ளது. தர்மபுரி இளவரசன் சம்பவம் முதல் பொன்பரப்பி சம்பவம் வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பாட்டாளி மக்கள் கட்சியை குறிவைத்து பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.


வெற்றி வாய்ப்பு இருந்தும் மோதல் ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை. கேட்டு இருந்தால் கூட்டணிக் கட்சி இடம் கொடுத்திருப்பார்கள். ஆனால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் மக்களவைத் தொகுதி விட்டு கொடுக்கப்பட்டது.

 

b

 

ஸ்டாலினை சந்திக்கும் வரை மவுனம் காத்த திருமாவளவன், ஸ்டாலினை சந்தித்த பின்பு போராட்டம் என்று அறிவிக்கிறார். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது பின்புலத்தில் ஸ்டாலின் இருந்து கொண்டு ஆளும் அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இவ்வாறு திட்டமிட்ட செயல்படுகிறார்.  திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நவீன தீண்டாமை, அரசியல் தீண்டாமையுடன் தான் திமுக நடத்திவருகிறது. அதேநேரத்தில் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே ஸ்டாலின் விசிகவை வைத்து இரட்டை வேடம் போட்டு வருகிறார்.

 

b

 

பானையை உடைத்தது வன்முறை துண்டும் வகையில் உள்ளதா?  முதலில் புகார் அளித்தது பாமக தான். பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகத் தான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடாமல் தவிர்த்தோம். யாருக்கும் பலனில்லை.. யாருக்கும் நன்மையில்லை.   திமுக இரட்டை வேடம் போடுகிறது.    உண்மை கண்டறியும் குழுவை அனுப்ப திமுக தயாரா.. திமுக விசிகவையும் - பாமகவையும் மோத விடுகிறது. கைதான 12 பேரில் பாமகவினர் மட்டும் இல்லை, அமமுகவினர் 3 பேர் உள்ளனர். விசிகவே பாமகவை பாராட்டியுள்ளது.  மறுவாக்குபதிவை வரவேற்கிறோம். அதை சந்திப்போம். மறுவாக்குபதிவு எங்களை நியாயப்படுத்தும்’’என்று தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்