style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழ்நாடு வரும் கேரள பேருந்துகள் கன்னியாக்குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே நிறுத்தப்பட்டது. மேலும் இஞ்சிவிளை என்ற இடத்தில் கேரள அரசு பேருந்துகளை தடுத்து நிறுத்தி பாஜகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.சபரிமலை சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்த்துபோராட்டம் நடத்துகின்றனர். கேரள அரசையும், காவல்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். நேற்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக சபரிமலை சென்றார். மத்திய மந்திாிகளின் வாகனங்களை தவிர எந்த தனியாா் வாகனங்களுக்கும் பம்பைக்கு அனுமதி இல்லை என்பதால் அவருடன் வந்தவர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});