மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 20 மணிநேரமாக தொடர்ந்து நடந்து வருகிறது.

Advertisment

pon radhakrishnan tweet about surjeet tweet

குழந்தை சுர்ஜித்திற்கு தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "லட்சக்கணக்கான மக்களின் பிரார்த்தனையின் பலனாகவும், பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு மற்றும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களின் முயற்சியால் குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப் படவேண்டும் . பிரார்த்திப்போம்" என பதிவிட்டுள்ளார்.