Skip to main content

பொன்னார் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடும் அ.தி.மு.க.!

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
pon radhakrishnan




பாராளுமன்ற தோ்தலுக்கு இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய மாதங்களே இருக்கிற நிலையில் தமிழகத்தின் ஒரே மத்திய மந்திரியாக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்திற்கு என்ன செய்தார்? என்ற கேள்வி பல்வேறு தரப்பினா் மத்தியில் பலமாக எழுகிறது.

 

இதேபோல் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்தான் வேட்பாளா் என்று பா.ஜ.க.வினரே கூறிக்கொள்வதோடு அதற்கான களப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா். 
 


எதிர்க்கட்சிகள் எத்தனை கட்சிகளோடும் கூட்டு வைத்து போட்டியிட்டாலும் கடந்த தோ்தலை போல் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையோடு கூறும் பா.ஜ.க.வினா் மத்தியில் இது குறித்து பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் பா.ரமேஷிடம் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்வியை முன் வைத்தோம்.

 

அப்போது அவா், என்ன செய்தார் பொன்னார் என்று கேட்க எதிர்க்கட்சிகளைச் சோ்ந்த எவருக்கும் அருகதை இல்லை. அவா் செய்திருக்கும் சாதனை இன்றைக்கோ நாளையுடனோ முடிந்து போவதல்ல. காலம், காலமாக தலைமுறை, தலைமுறையாக பேசப்படுவதை தான் அவா் செய்திருக்கிறார்.

 

குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் மேம்பாலம் கொண்டு வந்து மூச்சு விட தடுமாறி கொண்டிருந்த  பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இன்றைக்கு பெருமூச்சி விட வைத்திருக்கிறார். 


 

Pon Radhakrishnan



ஏற்கனவே இந்த இருபாலத்தையும் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் பெல்லாமின், தி.மு.க ஹெலன்டேவிட்சன்  தங்களுடைய தோ்தல் அறிக்கையிலே கூறி எம்.பி.க்கள் ஆனார்கள். 10 ஆண்டுகளாக இவா்களால் கொண்டு வரமுடியவில்லை. 

 

அதேபோல் தொடா்ந்து 6 முறை எம்.பி.ஆக இருந்த காங்கிரஸ் டென்னீஸ் அவரால் கொண்டு வர முடிந்ததா? ஆனால் பொ.ராதாகிருஷ்ணன் தோ்தல் அறிக்கையில் சொன்னது போல் 250 கோடி ரூபாயில் இரண்டு மேம்பாலங்களையும் கட்டி முடித்து இப்போது பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதை குமரிமாவட்டத்தை சோ்ந்தவா்கள் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்தவா்களும் கேரளா மக்களும் பாராட்டுகிறார்கள்.

 

இதேபோல் சுசிந்திரத்தில் வாகனத்தில் செல்லும் மக்களை எந்த நேரத்தில் அந்த பழுதடைந்த பாலம் பழிவாங்குகிறதோ என்ற அச்சத்தில் தினம், தினம் சுசிந்திரம் பாலத்தை கடக்கும் மக்களுக்கு நிரந்தர நிம்மதியை கொடுக்கும் விதமாக சுசிந்திரத்தில் மாற்று பாலம் கட்டி அதில் இன்று தினமும் ஆயிரக்கணக்கான 
வாகனங்கள் நிம்மதியாக செல்கின்றன. 

 

அதேபோல் கன்னியாகுமரிக்கு செல்லும் உள்ளூா் மற்றும் வெளிமாநில வாகனங்கள் ஊா்ந்து செல்லும் நிலையை மாற்றி நெருக்கடி இல்லாமல் செல்ல ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்பு பாலத்தை அமைத்துள்ளார். 

 

Pon Radhakrishnan



குமரி மாவட்ட மக்களின் இன்னொரு கனவு திட்டமான திருவனந்தபுரம் - நாகா்கோவில் - மதுரை இரட்டை வழி ரயில் பாதை திட்டத்தை கொண்டு வந்து அதற்கான பணிகள் தற்போது விரைந்து நடக்கிறது. 
 

மேலும் குமரி மாவட்ட இளைஞா்கள் பாஸ்போட் எடுக்க நெல்லை, மதுரை என்று அலைந்து கொண்டிருந்தார்கள். அவா்களின் சிரமத்தை போக்கும் விதமாக நாகா்கோவிலில் பாஸ்போட் சேவையை கொண்டு வந்து இன்று குமரி இளைஞா்கள் பயன் அடைந்து கொண்டிருக்கிறார்கள். 

 

இதையெல்லாம் மூடி மறைத்து தான் எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து மக்களை பா.ஜ.க.வுக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எதிராக திசை திருப்புகிறார்கள் என்றார். 

 

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் ரப்பர் மற்றும் கயிறு தொழிற்சாலை என்பது நீண்ட காலமாக மக்கள் கேட்டு கொண்டிருக்கிறார்கள். இதில் ரப்பரில் இருந்து பாலை வடித்தும், கதம்பை நாரில் இருந்து கயிறு திரிப்பது மட்டும் தான் இங்கு நடக்கிறது. ஆனால் ரப்பர் பால் மற்றும் கயிறுகளில் இருந்து இன்னும் எத்தனையோ வகையான பொருட்கள் தயார்படுத்தலாம். அந்த பொருட்களை தயார் செய்யக்கூடிய கம்பெனிகள் வரும் நிலையில் அந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு போக்குவரத்து வசதி உகந்ததாக இல்லை.

 

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் 28 ஆயிரம் கோடி மதிப்பில் இணையத்தில் வா்த்தக துறைமுகம் கொண்டு வர அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இடமும் தோ்வு செய்யபட்டு அதற்கான அலுவலகமும் திறக்கப்பட்டது. 


 

Pon Radhakrishnan



இந்த துறைமுகம் வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் படித்த ஆயிரக்கணக்கான இளைஞா்களின் வேலை வாய்ப்புக்கு வழி வகுக்கும். ஆனால் இந்த துறைமுகம் வருவதற்கு  தமிழக அரசு எந்த ஒரு ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. துறைமுக திட்டத்தை எதிர்த்து ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அவா்களுக்கு ஆதரவாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் போராடினார்கள். இதனால் அந்த திட்டம் ஊசலாடி கொண்டிருக்கிறது. தமிழக அரசும் அந்த 6 எம்.எல்.ஏ.க்களும், ஓட்டுக்காகவும்தான் துறைமுகத்துக்கு அக்கரை காட்ட வில்லை என்று பா.ஜ.க வினா் குற்றம் சாட்டியுள்ளனா்.

 

அதே போல் பொன்.ராதாகிருஷ்ணன் சாமித்தோப்பில் விமான நிலையம் கொண்டு வர மத்திய அதிகாரிகளை அழைத்து வந்து இடம் ஆய்வு செய்தார். அதற்கும் தமிழக அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. விமான நிலையம் கொண்டு வந்து அந்த பெயர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. எம்.பி. விஜயகுமாரும் அந்த திட்டத்துக்கு முட்டுகட்டையாகவே இருந்தார்.
 

 

பொதுவாக குமரி மாவட்டத்தில் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் பொன்.ராதாகிருஷ்ணனின் பல்வேறு திட்டங்கள் கிடப்பிலே கிடக்கிறது என்கின்றனா்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.