Advertisment

புகழ்ந்து பேசி புல்லரிக்க வைக்க வேண்டாம்... பாராட்டு விழாவில் பொன்மாணிக்கவேல்!

Appreciation Ceremony

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழகத்தில் களவாடப்படும் சிலைகளை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சிலைகளை மீட்டெடுத்தவர் தமிழக சிலைகடத்தல் தடுப்புபிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல். இவர் நாளையுடன் பணி ஓய்வு பெறுவதால் ரயில்வே காவலர்கள் சார்பில் சென்னை பெரம்பூரில் பாராட்டு விழா நடைபெற்றது.

Advertisment

இந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட பொன்மாணிக்கவேல் அங்கு விழாவில் கலந்து கொண்ட காவலர்களுடன் பல்வேறு சுவாரசியமான விஷயங்களை கலந்துரையாடினார். அதேபோல் 15 வருடத்திற்கு முன் தான் கையாண்ட ஒரு வழக்கினை பற்றிய சுவாரசிய தகவல்களையும் பரிமாறிக் கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் இறுதியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்த காவலர்கள் தரப்பில் நடந்த மேடை உரையாடலில் சிலைகடத்தல் தடுப்புபிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் அவர்களைப்பற்றி பாராட்டும் விதமாக பேசினார்கள். அப்போது குறுக்கிட்ட பொன்மாணிக்கவேல் ''நானும் உங்களைப் போல ஒரு காவலர் தான் எனவே புகழ்ச்சி தரும் விதமாக பேசி புல்லரிக்க வைக்க வேண்டாம்'' என நகைச்சுவையாக கேட்டுக்கொண்டார்.

IG Ponmanikavel Aaivu pon manickavel
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe