Skip to main content

தன் விருப்பப்படியே விசாரணை நடத்தினார் பொன்.மாணிக்கவேல்! - மேலும் 11 அதிகாரிகள் குற்றச்சாட்டு!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018

 

pon manicavel

 

விசாரணை அதிகாரியை சுதந்திரமாக விசாரணை நடத்த விடாமல் தன் விருப்பப்படியே விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் பொன்.மாணிக்கவேல் உத்தரவிடுகிறார். தன் விருப்பப்படி மட்டுமே வழக்கு நடைபெற வேண்டும் என்றும் ஆதாரம் இல்லாத போது கூட கைது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். நெருக்கடி காராணமாக ஓராண்டு வரை மருத்துவ விடுப்பில் இருந்துள்ளோம், பொன்.மாணிக்கவேல் தலைமையில் எந்த சிலையையும் கண்டெடுக்கப்படவில்லை. பொன்.மாணிக்கவேல் ஐ.ஜி.ஆக இருந்த பொழுது அவர் மீது புகார் கொடுக்க முடியவில்லை. அவரை சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் நியமித்துள்ளதால் அவருக்கு கீழ் இனிமேலும் பணி புரிய முடியாது எனவே எங்களுக்கு வேறு ஏதாவது பணி ஒதுக்கும்படி டிஜிபி யிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்...

 

பொன்மாணிக்கவேல் மீது நேற்று 13 பேர் புகார் அளித்திருந்த நிலையில் மேலும் 11 பேர் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்தைப் புதைக்க நினைக்கிறார்கள்” - சு. வெங்கடேசன் எம்.பி.

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Su Venkatesan MP says They are afraid of the present and want to bury the past

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், வெள்ளை அறிக்கை மீதான விவாதம் இன்று (09-02-24) மக்களவையில் நடைபெற்றது. 

வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், “சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலேயே வாழ்வார்கள். அதுபோல் சில கட்சிகளும் தேர்தல் வந்துவிட்டால் வேலையின்மை, வறுமையை பற்றி நாங்கள் பேசினால், பா.ஜ.க பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பை பற்றி பேசுகிறார்கள்.

நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், நீங்கள் பாபரைப் பற்றிப் பேசுகிறீர்கள். நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், நீங்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள், நிகழ்காலத்திற்கு அஞ்சி நாட்டைக் கடந்த காலத்திற்குள் புதைக்க நினைக்கிறீர்கள். கடந்த காலத்தை கழித்துவிட்டால் உங்களிடம் எதிர்காலத்தை சந்திக்கிற எந்தவொரு கருவியும் இல்லை” என்று கூறினார்.

Next Story

‘பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் போது பொருளாதாரம் பலவீனமாக இருந்தது’ - நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
white report tabled in Parliament on BJP has taken difficult decisions to go on the path of development

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) குடியரசுத் தலைவர் உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசினார்.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான 10 ஆண்டுக்கால மன்மோகன் சிங் கீழ் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அப்போதைய அரசால் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

2008ம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பொருளாதார மந்த நிலையின் போது இந்தியா மோசமாக பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் போது பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை. மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி விட்டுச் சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இந்தியாவை நிலையான வளர்ச்சிப் பாதையில் வைக்க கடினமான முடிவுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்துள்ளது என்று வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.