Polytechnic Admission on the basis of ninth class marks-Minister Ponmudi

Advertisment

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தொழிற்கல்வி எனப்படும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். 11ஆம் வகுப்பிற்கு எந்த அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்களோ, அதே அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்களும் முதலாமாண்டு சேர்க்கப்படுவார்கள். இதே போன வருடம்பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், அந்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்'' என தெரிவித்தார்.