Skip to main content

பொல்லானுக்கு மரியாதை! கொங்கு மண்ணில் அருந்ததியினர் சமூகம் உற்சாகம்!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 


நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்தியா முழுக்க ஆங்காங்கே சிறு சிறு குழுக்கள் ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து வீரமிக்க பல போர்களை நடத்தியது. அதில் ஒன்று தான் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை கிராமத்தில் தீரன் சின்னமலை தலைமையில் இயங்கிய ஒரு குழு ஆங்கிலேயர்களை எதிர்த்து மூன்று போர்களை நடத்தியது. பிறகு பிரிட்டீஸ் படைகளால் தீரன் சின்னமலையும் அவரது குழுவில் இருந்த சிலரும் கொல்லப்பட்டனர்.

 

p

 தீரன் சின்னமலையின் குழுவைச் சேர்ந்தவர் பொல்லான் என்பவர். இவர் ஆங்கிலேயர்களின் நிர்வாக அலுவலகத்தில் தீரன் சின்னமலையின் ஒற்றராக பணிபுரிய அனுப்பப்பட்டார். அங்கிருந்து ஆங்கிலேயர்களின் ரகசிய செயல்பாடுகளை செருப்பில் வைத்து தைத்து அதை தீரன் சின்னமலைக்கு அனுப்பி வைத்தார். இதன் மூலம் ஆங்கிலேய படைகளின் படையெடுப்பை முன்கூட்டியே தீரன் சின்னமலை தெரிந்து கொண்டு இரன்டு முறை போர் புரிந்து ஆங்கிலேய படைகளை வீழ்த்தினார் என்பது வரலாற்று குறிப்பாக உள்ளது. 

 

பொல்லான், தீரன் சின்னமலையின் உளவாளி என தெரிந்து கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் ஆடி - 1 ந் தேதி பொல்லானை சுட்டு கொன்றது. பிறகு ஆடி-18 அன்று தீரன் சின்னமலையை சங்ககிரி கோட்டையில் வைத்து தூக்கிட்டு கொன்றது. 

 

பிற்காலத்தில் தீரன் சின்னமலை கொங்கு வேளாள கவுண்டர்களின் தியாகியாக அச்சமூகத்தால் போற்றப்பட்டு அவரது நினைவு நாள் கொங்கு பகுதிகளில் எழுச்சியாகவும், அரசு விழாவாகவும்  நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் தீரனின் படையில் இருந்து ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பொல்லானுக்கு எந்த மரியாதையும் இதுவரை அரசு சார்பில் நடத்தப்படவில்லை.   இவ்விவகாரத்தை கடந்த மூன்று நான்கு வருடங்களாக எடுத்துக் கொண்டு அரசிடம் போராடி வந்தது அருந்ததியினர் இளைஞர் பேரவை. இதை நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்ல சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சுதந்திர போராட்டத்தில் தீரன் சின்னமலை படை பிரிவில் இருந்தவர் தான் பொல்லான்.   ஆகவே அவரது நினைவு நாளை அரசு மரியாதை செலுத்தும் என நீதிமன்றத்தில் பதில் கொடுத்தது. " இவ்வருடம் முதல் பொல்லான் நினைவு நாள் அரசு சார்பில் அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு மணிமண்டமும் முழு உருவ வென்கல சிலையும் வைக்க வேண்டும்" என்றார் அருந்தியினர் அமைப்பை சேர்ந்த வடிவேல் என்பவர்.

l

 

தீரன் சின்னமலை கவுண்டர் சமூகம்.  பொல்லான் தலித் பிரிவில் அருந்ததியினர் சமூகம். கொங்கு மண்ணில் தங்கள் சமூக தலைவருக்கு அரசு மரியாதை பெற்றதில் அச்சமூகத்தினர் உற்சாகமடைந்துள்ளனர்.


பொல்லான் நினைவு நாளான ஆடி - 1 ந் தேதி 17. 7.19 புதன்கிழமையன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு அலுவலகத்தில் அவரது படம் வைத்து மாலை அணிவித்து அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்துகிறார்கள். ஆடி - 18 அன்று தீரன் சின்னமலை நினைவு நாளன்று அவரது சிலைக்கு கொங்கு அமைச்சர்களான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் வரிசையாக சென்று மரியாதை செய்வது வழக்கம். இம்முறை தீரன் சின்னமலையின் படை தளபதி பொல்லான் நினைவு நாளுக்கு எத்தனை அமைச்சர்கள் மரியாதை செலுத்தப் போகிறார்கள் என்பது புதன்கிழமை தெரிந்துவிடும்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தீரன் சின்னமலை அடக்குமுறைக்கு எதிரான எரிமலை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

Chinnamalai in his chest a volcano against oppression Chief Minister M.K.Stalin

 

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று தமிழக அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளைப் போற்றுகின்ற வகையில், சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை. அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்; முதல்வர் மரியாதை

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

Freedom Fighter Theeran Chinnamalai Memorial Day Respect from the Chief Minister

 

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் அருகேயுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் ரத்தினசாமி - பெரியாத்தா தம்பதியினருக்கு 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தீர்த்தகிரி ஆகும். தீரன் சின்னமலை இளம் வயதிலேயே சிலம்பாட்டம், வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தம், தடிவரிசை உள்ளிட்ட பல பயிற்சிகளைக் கற்று சிறந்த வீரராகத் திகழ்ந்தவர் ஆவார்.

 

ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்திட தொடர்ந்து போரிட்டு 1801 ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக்கரையிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயருடன் நடைபெற்ற போர்களில் தீரன் சின்னமலை அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றார். தீரன் சின்னமலை அவர்களைப் போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து போலி விசாரணை நடத்தி கடந்த 1805 ஆம் ஆண்டு சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிட்டனர்.

 

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வீரத்தினையும், தியாகத்தையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கும், சேலம் மாவட்டம் சங்ககிரிக் கோட்டையில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்திலும், அவரின் நினைவுத்தூண் அமைந்துள்ள இடத்திலும், அவரின் நினைவினைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளைப் போற்றுகின்ற வகையில், சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.