/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/194_3.jpg)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி சிவசக்தி(37). இவர் அழகுக் கலை நிபுணராக இருந்து வருகிறார். நேற்று(31.5.2022) ஈரோட்டில் ஒரு திருமண நிகழ்வில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காகப் பொள்ளாச்சியில் இருந்து அரசு பேருந்து மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது அரசு பேருந்து பல்லடம் அருகே சென்று கொண்டிருந்த போது இருக்கையில் அமர்ந்திருந்த சிவசக்தி எழும்ப முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறிய சிவசக்தி பேருந்து படிக்கட்டு வழியாகக் கீழே விழுந்துள்ளார். இதையறிந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தை நிறுத்திவிட்டு வந்து பார்க்கையில் படுகாயம் அடைந்த சிவசக்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிவசக்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)