Advertisment

பொள்ளாச்சி விவகாரம் – திருவண்ணாமலை மாணவர்கள் மறியல்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் வெளியிட்ட வீடியோ தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 250க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சூறையாடிய விவகாரத்தில் அதிமுக பிரமுகர்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் இந்த விவகாரத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள் என்பதால் இந்த விவகாரத்தில் ஆளும்கட்சியான அதிமுக பாஜக அதன் கூட்டணி கட்சிகள் தவிர பிற அரசியல் கட்சிகள் இதில் தீவிர கவனம் செலுத்தின. மார்ச் 12ந்தேதி திமுக எம்.பி கனிமொழி பொள்ளாச்சியில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவ – மாணவிகள் மார்ச் 13ந்தேதி சாலைக்கு வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Advertisment

d

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ – மாணவிகள் இரண்டாயிரம் பேர் கல்லூரிக்கு வெளியே வந்து குவிந்தனர். இந்த போராட்டத்தை திமுக மாணவரணி, இடதுசாரிகளின் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. திருவண்ணாமலை – பெங்களுரூ சாலையில், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும், எந்த அரசியல் நிர்பந்தத்துக்கும் காவல்துறை அடிபணியக் கூடாது என கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.

Advertisment

d

அதிமுக பிரமுகர்களின் மகன்கள் இந்த விவகாரத்தில் ஈடுப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தை விரைவில் சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவ – மாணவிகள்.

collage jayaraman thiruvannamalai pollachi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe