பொள்ளாச்சி பாலியல் கொடூரம் -  திருநாவுக்கரசு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான முக்கிய நபர் திருநாவுக்கரசு. பெண்களை ஏமாற்றி வக்கிரத்துடன் நடந்துகொண்ட திருநாவுக்கரசு கைதாகி சிறையில் உள்ளார். இவர் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவின் பேரில் திருநாவுக்கரசு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ட்

கொடுஞ்செயலில் ஈடுபட்ட மற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், திருநாவுக்கரசு மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் மீதமிருக்கும் வசந்த், ரிஷ்வந்த், சபரி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்பு

உள்ளது என்றும், அதற்காக இன்று கையெழுத்து ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி தகவல் தெரிவித்துள்ளார்.

pollachi rajamani thirunavukkarasu
இதையும் படியுங்கள்
Subscribe