Advertisment

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்;  திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கேட்ட தாயார் செல்வி! நீதிமன்றம் மறுப்பு!

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்துள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த பாலியல் கொடூர வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பாலியல் கொடூர வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவின் பேரில் திருநாவுக்கரசு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Advertisment

]

p

பொதுமக்கள் அனைவரும் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், பெண்களை ஏமாற்றி வக்கிரத்துடன் நடந்துகொண்ட திருநாவுக்கரசுவின் தாயார் செல்வி, மகன் மீதுள்ள பாசத்தினால் திருநாவுக்கரசுவை ஜாமீனில் விடுவிக்கக்கோரி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், செல்வியின் கோரிக்கையை நிராகரித்தது. திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

Advertisment
court police pollachi thirunavukkarasu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe