பொள்ளாச்சி பாலியல் கொடூரம்... 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வசந்தகுமார் சபரீராஜன்,சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளர்.

pollachi

இந்த கடந்த மாதம்தான்சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி பொள்ளாச்சி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு பின்னர் சிபிஐ க்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை வழக்குபதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று விதிகளின் அடிப்படையில், முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

pollachi

பாலியல் வன்கொடுமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தாக்கியது என இரண்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன்,சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் மீதும் தனித்தனியாக கோவை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையைதாக்கல் செய்துள்ளது.

CBI charges pollachi sexual abuse
இதையும் படியுங்கள்
Subscribe