தமிழகத்தை தாண்டி இந்தியாவேபதைபதைத்தது நக்கீரன் அம்பலப்படுத்திய பதிவு. அது,பொள்ளாச்சி பாலியல் கொடூரர்கள் நடத்திய கோரம்தான், காண்போரின் இதயமெல்லாம் வெடித்து சிதறும் அளவுக்கு அந்த கொடுமையானா இந்த செயலுக்கு பலதரப்பிடம் இருந்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குதண்டைனை உடனடியாக வழங்கிட வேண்டும் என போராட்டங்கள் நடந்துவருகிறது.

Advertisment

pollachi sexual abuse case;Young woman who tried to commit suicide

நக்கீரன் பதிவு மக்களை குறிப்பாக பெண்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இன்று ஈரோட்டில் வீரமணி என்ற இளம் பெண் தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்திற்கு வந்திருந்தார். திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்றவர் "அந்த மிருகங்கள் எங்கள் சகோதரிகளை ஐயோ கேட்கவே நெஞ்சு வெடிக்குதே... அந்த மிருகங்கள் நான்கு பேர் மட்டுமல்ல நக்கீரன் அம்பலப்படுத்தியது போல் அது ஒரு நெட்வொர்க். ஆளும் கட்சி அரசியல்வாதிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் காவல் துறை அதிகாரிகள் காம மிருகங்களுக்கு துணை போயுள்ளது.

Advertisment

pollachi sexual abuse case;Young woman who tried to commit suicide

அந்த வேட்டை நாய்கள் யாராக இருந்தாலும் விடக் கூடாது மிக விரைவாக வழக்கை முடித்து குற்றவாளிகள் எல்லோரையும் பொது இடத்தில் வைத்து கொல்ல வேண்டும் அப்போதுதான் இது போன்ற செயல்களில் காம பிசாசு நாய்கள் ஈடுபடாது. இந்த போராட்டத்திற்காக நான் உயிர் தியாகம் செய்கிறேன் என கூறியவாரே உடன் கொண்டு வந்த மண்ணென்னையை எடுத்து உடல் முழுவதும் ஊற்ற தொடங்கினார்.

pro

Advertisment

எங்கிருந்தோ ஓடி வந்த போலீசார் தீ குளிப்பதை தடுத்து அப்பெண்ணின் உயிரை காப்பாற்றினார்கள். பிறகு தற்கொலைக்கு முயன்றதாக இளம் பெண் வீரமணியை சூரம்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை முழுமையாக கொண்டு வந்து கொல்ல வேண்டும் என்று இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.