Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; தடையை மீறி கனிமொழி தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்!!

Published on 12/03/2019 | Edited on 12/03/2019
 Pollachi sexual abuse case; DMK protests

 

பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை கும்பல் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவரகள், திரையுலக பிரமுகர்கள் என பல தரப்பினரும் கூறி வருகின்றனர். 

 

 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், சபரீசன் ஆகிய நால்வருக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

 

 

திமுக சார்பில் இன்று கோவை பொள்ளாச்சியில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது தடையை மீறி போராட்டம் நடந்து வருகிறது. எம்பி. கனிமொழி தலைமையில் நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள், மாதர் சங்க அமைப்புகள், காங்கிரஸ், மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் பங்குபெற்றுள்ளன. இந்த போராட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் மேலும் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை தரவேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கைமாறிய பெரும் தொகை?-ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் இருவர் கைது

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Huge amount changed hands?- Two more arrested in Armstrong case including woman

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக  சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் சரணடைந்த மொத்தம் 11 பேர் 5 நாட்கள் காவல் துறை கஸ்டடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தை தவிர்த்து மற்ற 10 பேரும் 5 நாள் காவல் கஸ்டடி முடிந்து பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மலர்கொடி மற்றும் ஹரிஹரன் என்ற இருவரை போலீசார் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கறிஞரான ஹரிஹரன் தரப்பில் இருந்து கொலையாளிகளுக்கு பெரும் தொகை மாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஹரிஹரன், மலர்க்கொடியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

மலர்கொடி  ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த தாதாவான தோட்டம் சேகருடைய மனைவி  என்று தெரியவந்துள்ளது. எதற்காக, யாரால் இந்த கொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

தகராறு செய்த மனைவி; திருமணம் செய்து வைத்த புரோக்கரை தாக்கிய கணவர்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
 husband  beaten broker who had married him because his wife had a dispute

விழுப்புரம் மாவட்டம் வடவாம்பழத்தைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் சக்திவேல். இவர் கூலி தொழில் பார்த்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி என்வருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சக்திவேல் - ஜெகதீஸ்வரி இருவருக்கும் அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்ற கல்யாண புரேக்கர் திருமணம் செய்துவைத்திருக்கிறார். 

இந்த நிலையில் கணவன் சக்திவேலுக்கும், மனைவி ஜெகதீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோன்று சம்பவத்தன்று இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிக் கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி ஜெகதீஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இருவருக்கும் வரன் பார்த்து திருமணம் செய்துவைத்த புரோக்கர் பெருமாளை தாக்கியுள்ளார். அரசமங்கலம் ரேஷன் கடையில் நின்றுக்கொண்டிருந்த அவரை சக்திவேல், “நீ தான எனக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வச்ச, இப்போ பாரு என் மனைவி அடிக்கடி சண்டை போடுறா..” என்று ஆபாச வார்த்தையில் புரோக்கர் பெருமாளை திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புரோக்கர் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.