style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவரகள், திரையுலக பிரமுகர்கள் என பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து வலியுறுத்தல்கள் வந்த நிலையில்சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கைதற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.