பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்டதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

police

police

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் இந்த வழக்கில் திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஸ்,சபரீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி.பாண்டியராஜன் வழக்கின் ஆரம்பத்திலேயே இந்த வழக்கில் நான்கு பேருக்குத்தான் சமபந்தம் உள்ளதாக கூறியதற்குஅவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவது கோரிய அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை குறிப்பிட்டதை கண்டித்துஅந்த பெண்ணிற்கு 25 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசிற்குஉத்தரவிட்டுள்ளது.