Advertisment

பொள்ளாச்சியில் பிறந்தால் என்ன தப்பு செஞ்சாலும் தப்பிச்சிறலாமோ? புகார் கொடுத்தவரையே மிரட்டி எழுதிவாங்கிய போலிஸ்!

பொள்ளாச்சி தாலுகா கிணத்துக்கடவு காட்டம்பட்டி அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் போலிஸில் புகார் கொடுத்தும், சாலை மறியல் செய்தும் போராட்டம் நடத்தினார்கள்.

Advertisment

ஆனால், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத போலிஸ், மாணவிகளின் பெற்றோரை மிரட்டி 20 ரூபாய் பத்திரத்தில் ஆசிரியர் நல்லவர் என்று எழுதி வாங்கியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, சரியாக விசாரிக்காமல் போராட்டம் நடத்தியதாகவும், எதிர்காலத்தில் இதுபோல புகார் கொடுக்க மாட்டேன் என்றும், இதுவிஷயமாக நீதிமன்றம் செல்ல மாட்டேன் என்றும் எழுதி வாங்கியிருக்கிறார்கள்.

Advertisment

அப்படி எழுதி வாங்கப்பட்ட 20 ரூபாய் பத்திரம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பத்திரத்தில் 11.2.2020 என்று தேதியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், போலிஸின் இந்த அத்துமீறலையடுத்து, இந்திய ஜனநாயக மாதர்சங்கம் இதில் தலையிட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர் வியாழக்கிழமை கைது செய்து கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

police action complains public pollachi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe