கடல் கடந்து காதலனை கரம் பிடித்த மெக்சிகோ பெண்; தமிழ்நாட்டு ஸ்டைலில் குத்தாட்டம்!

 Pollachi man who married a Mexican woman

கோவை மாவட்டம் பொள்ளாட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மெக்சிகோ நாட்டு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குப்புச்சிபுதூரைச் சேர்ந்த இளைஞர் சவுத்திரி ராஜ் மெக்சிகோ நாட்டிற்கு படிக்க சென்றுள்ளார். இவரதுதந்தை தண்டாயுதபாணிகுப்புச்சிபுதூரில் டீ கடை நடத்தி வருகிறார். சவுத்திரி ராஜ் கோவையில் படிப்பு முடிந்த கையோடு மெக்சிகோவில் மேற்படிப்பை தொடர்ந்துள்ளார். படிப்பு முடிந்த பிறகு அங்கேயே வேலையும் பார்த்து வந்தசவுத்திரி ராஜ், அப்போது தன்னுடன் பணிபுரிந்து வந்த டேனியலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

Pollachi man who married a Mexican woman

இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருவீட்டாரின் சம்மதத்துடன் பொள்ளாச்சியில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதற்காக பெண்வீட்டார் மெக்சிகோவில் இருந்து பொள்ளாச்சி வந்து திருமணத்தில் கலந்துகொண்டனர். திருமணத்தின் போது மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் தமிழ்நாட்டு ஸ்டைலில் நடனமாடி அசத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mexico pollachi Wedding
இதையும் படியுங்கள்
Subscribe