Advertisment

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை; பாதிக்கப்பட்ட பெண்களிடம் தனித் தனியே விசாரணை

nn

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தையேஅதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் தற்பொழுது முதல் கட்டமாக விசாரணை நடைபெற்றது.

Advertisment

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. வீடியோ எடுத்து மிரட்டப்பட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து திருநாவுக்கரசு, சபரீசன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட எட்டு பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சாட்சியங்களிடம் முதல் கட்டமாக தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.

Advertisment

Investigation CBI pollachi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe