Advertisment

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் 'பார்' நாகராஜை மடக்கிய சிபிஐ!

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய "பார்' நாகராஜை மடக்கிட்டாங்கன்னு கடந்த 8ஆம் தேதி பரபரப்பாக செய்திகள் வெளியாகின. ஆளும்கட்சி அதிகாரப் புள்ளிகளிடம் செல்வாக்கு பெற்ற "பார்' நாகராஜை, லோக்கல் போலீஸ் விசாரிக்காம காப்பாத்திக்கிட்டிருந்தது என்ற குற்றச்சாட்டும் வந்தது. மே 8-ந் தேதி காலை 8.30 மணியிலிருந்து அவரைக் காணோம்ன்னு அவர் குடும்பத்தினரும் நண்பர்களும் பரபரப்பா தேடினாங்க.

Advertisment

pollachi issues

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அப்புறம் 11 மணியளவில் அவர் வீட்டுக்கு வந்திருக்காரு. வீட்டுக்கிட்ட உள்ள தியேட்டர் வாசலில் அவர் நின்னுக்கிட்டிருந்தப்ப, அங்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குண்டுக்கட்டாகத் தூக்கிப் போய், 3 மணிநேரம் விசாரிச்சிட்டு, 11 மணிவாக்கில் கொண்டுவந்து விட்டுட்டுப் போயிட்டதா அதிகாரிகள் தரப்பிலிருந்து செய்தி பரவியது. ஆனால் பார் நாகராஜோ, நான் என் மாமியார் வீட்ட்டுக்குத்தான் போயிருந்தேன்… வேற மாதிரி கிளப்பி விட்டிருக்காங்கன்னு சொல்றாராம். மாமியார் வீடான்னு பலருக்கும் ஆச்சரியமாக கேட்டதாக அந்த ஏரியாவில் ஒரு பேச்சு அடிபட்டது. பொள்ளாச்சி விவகாரத்தை சி.பி.ஐ.யாவது சரியா கையாளுமா, அல்லது குற்றவாளிகளை விட்டுட்டு பாலியல் வன் கொடூரத்தை அம்பலப் படுத்தியவங்களை குறி வைக்குமான்னு போகப் போகத்தான் தெரியும்னு அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

CBI Nagaraj pollachi jeyaraman public issues pollachi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe