pollachi issues dmk kanimozhi police not allowed

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்யக்கோரி தி.மு.க. மகளிர் அணி சார்பில், தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் பொள்ளாச்சியில் இன்று (10/01/2021) போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

pollachi issues dmk kanimozhi police not allowed

Advertisment

அதைத் தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்க கோவை விமான நிலையத்திலிருந்து பொள்ளாச்சியில் போராட்டம் நடைபெறவுள்ள இடத்திற்கு சென்று கொண்டிருந்த கனிமொழி எம்.பி., மற்றும் தி.மு.க.வினர் கற்பகம் கல்லூரி அருகே வந்த போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து சாலையில் அமர்ந்த கனிமொழி எம்.பி., தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.