Advertisment

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தற்கொலை செய்த பெண்கள் விவரம் சிபிஐ அதிரடி!

தமிழகத்தையே அதிர்ச்சி சம்பவத்திற்கு உருவாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி காவல்துறை துறையிடம் இருந்து இந்த வழக்கு மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் மாற்றப்பட்டது. இந்த வழக்கு சம்மந்தமாக பாதிக்கப்பட்ட பெண்கள், மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வீடு மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

pollachi issues

இந்நிலையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் வசந்தகுமார், மணிவண்ணன் வீடுகளில் ரகசியமாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள். மேலும் இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக கூறப்பட்ட பண்ணை வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்தியதாக சொல்லப்படுகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கு சம்பந்தமாக தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளதால் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனிடையே பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக இளம் பெண்கள் தற்கொலை செய்துகொண்ட தகவல் மற்றும் விவரங்களை சிபிஐ அதிகாரிகள் சேகரித்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment
hospital government CBI pollachi jeyaraman public issues pollachi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe