பொள்ளாச்சி பாலியல் வழக்கு...சிபிஐ வலையில் மேலும் 3 பேர்!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்கள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை பொது மக்கள் ஏற்படுத்தியது. சமூக வலைத்தளம் மூலம் பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து நெருக்கமாக பழகும் நேரங்களில் ஆபாசமாக படம் எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறிப்பதோடு பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.

pollachi issues

இந்த வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவதாக, மணி என்கிற மணிவண்ணனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரை தாக்கிய வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிவண்ணன் மீது தற்போது பாலியல் வன்கொடுமை வழக்கும் போடப்பட்டுள்ளது.கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மணிவண்ணனை பாலியல் வழக்கில் கைது செய்ததற்கான ஆவணங்களை, கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர். பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் என முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காணும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறனர். விரைவில் மேலும் 3 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிபிஐ வலையில் சிக்கப்போகும் அந்த மூன்று பேர் யார் என்று பரபரப்பாகியுள்ளது.

case CBI pollachi Pollachi Jayaraman public issues
இதையும் படியுங்கள்
Subscribe