பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை விவரங்களை வெளியிட உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பான வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் சரவணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கின் விசாரணை ரகசிய விசாரணையாக நடத்த இருப்பதால் இறுதி அறிக்கையை அம்பலப்படுத்தும் வகையில் மனுதாரர்களுக்கு வழங்க முடியாது என தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் விசாரணை விவரங்களை வெளியிடக்கோரிய மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கலாம் என மனுதாரர் சங்கங்களுக்கு அறிவுரை. இதனையடுத்து வழக்கின் விசாரணை அறிக்கையை டிசம்பர் 3- ஆம் தேதி தாக்கல் செய்யவும் சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.