Advertisment

பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்! உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! மு.தமிமுன் அன்சாரி

thamimun ansari

மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

பொள்ளாச்சியில் குடும்ப பெண்கள், கல்லூரி பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோரை குறிவைத்து திருநாவுக்கரசு, நாகராஜ் உள்ளிட்ட சமூக விரோத கும்பல் ஒன்று பாலியல் வக்கிரங்களை மேற்கொண்ட செய்திகள் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

இதில் சம்மந்தப்பட்ட யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.மேலும், பாலியல் வக்கிரங்களை தாண்டி பல கொலைகளும் நடைப்பெற்றிருப்பதாக வரும் செய்திகள் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே இவ்விஷயத்தில் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, இதில் தொடர்புடையவர்கள் எவ்வளவு பெரிய சக்தி மிக்கவர்களாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.

pollachi THAMIMUN ANSARI
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe