பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவரகள், திரையுலக பிரமுகர்கள் என பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.

Advertisment

Nanjil Sampath

இந்த நிலையில் அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், ''நிலேச்சத்தனமாக நடந்துகொண்ட அந்த மிருகங்கள் ஆளுங்கட்சியின் ஆசீர்வாதத்துடன்தான் இதை செய்திருக்கிறார்கள். தமிழகத்திற்கே தலைகுனிவு ஏற்படுத்தியிருக்கும் இந்த பிரச்சனையில், பெண்களை நாசம் செய்த அந்த மிருகங்களை மட்டுமல்ல மிருகங்களுக்கு பின்னாலிருக்கும் பெரிய மனிதர்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும். பெண்ணியத்தையும் கண்ணியத்தையும் நேசிக்கிறவர்கள் இதை சும்மா விடமாட்டார்கள்.'' இவ்வாறு கூறியுள்ளார்.