பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவரகள், திரையுலக பிரமுகர்கள் என பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.

Advertisment

kamal

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று மதியம் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் டிகே.ராஜேந்திரனை சந்தித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மன்னிக்க முடியாத ஒரு சம்பவம். மக்கள் இருக்கும் அதே கோபத்தோடு டிஜிபியிடம் இந்த சம்பவத்தின் பதற்றம் குறித்து தெரிவித்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது எனது தேர்தல் பிரச்சாரம் குறித்தும் தெரியப்படுத்தினோம் என்றார்.