பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேர் சேலம் சிறைக்கு திடீர் மாற்றம்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர், கோவை மத்திய சிறையில் இருந்து திடீரென்று சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

Five arrested person in sudden transfer to Salem jail

பொள்ளாச்சியில் பல பெண்களை ஆபாச படம் எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடந்த இரு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது.இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்தகுமார், சதீஸ், சபரிராஜன் என்ற ரிஷ்வந்த் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

Five arrested person in sudden transfer to Salem jail

இந்த வழக்கில் சிபிஐ காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர்கள் ஐந்து பேரையும் திடீரென்று சேலம் மத்திய சிறைக்கு மாற்றி, சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மத்திய சிறையில் மேற்கண்ட ஐந்து கைதிகள் மீது மற்ற கைதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று கிடைத்த தகவலால், அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

police pollachi sexual abuse Salem
இதையும் படியுங்கள்
Subscribe