பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ''பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. அனைவரும் ஓரணியில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டிய இந்த விவகாரத்தில், அநாகரிகமான அரசியல் செய்யும் சக்திகளுக்கு இது சரியான பதிலாக அமையும்!'' என கூறியுள்ளார்.