Advertisment

9ஆம் வகுப்பு மாணவியுடன் வீட்டுக்குள் இருந்த இளைஞர்! பெற்றோர்கள் அடித்ததில் உயிரிழப்பு!

p

Advertisment

பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தைசேர்ந்த 22 வயது இளைஞன் கௌதம். அவன் பொள்ளாச்சி நகரப் பகுதியில்உள்ள ஒரு கடையில் சேல்ஸ் மேனாக வேலை செய்து கொண்டிருக்கிறான். அவன் அதே பொள்ளாச்சி நகரப் பகுதியில் 9 படிக்கும் மாணவி ப்ரியாவுக்கு (பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது) காதல் வலை வீசினான்.

ப்ரியாவும் அது என்ன வலை என்பதை அறியாத படியேதான் அந்த வலையில் விழுந்தாள். இது காதல் என்று டி.விக்கள் சொல்லிக் கொடுக்க பள்ளி முடிந்த மாலை நேரங்கள் ப்ரியாவும், கௌதமும் காதலில்சிறிது தூரம் தாண்டி இருந்தார்கள்.

இந்த நிலையில் கரோனோ காலம் வந்து ப்ரியாவும், கௌதமும் வீடுகளுக்குள் தங்களை அடைத்துக் கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று.

Advertisment

கடந்த வாரத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட சில நாட்களில், ப்ரியாவின் அப்பாவும், அம்மாவும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். இதை அறிந்து கொண்ட கௌதம் ப்ரியா உன்னைபார்க்க வர்றேன். உன்னைபாக்காம இருக்க முடியல என செல்போனில் சொல்ல, சரி சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டு போ வீட்டில் யாருமில்லை என சொல்லி இருக்கிறாள் ப்ரியா.

கடந்த 8- ந் தேதி மதிய நேரத்தில், ப்ரியாவின் வீட்டுக்குள் நுழைந்தான் கௌதம். ப்ரியாவை காதலில் இருந்து காமத்திற்கு அவன் கடத்திக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டு கதவு தட்டப்பட்டது,பதறினார்கள் இருவரும். பின்னர் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர், ப்ரியாவின் அப்பாவும், அவளது 17 வயது அண்ணனும்.

அடிப்பாவி என கோபம் கொண்டு ப்ரியாவை அடித்து தள்ளி விட்டு, அப்பாவும், மகனும் வீட்டினுள் இருந்த கிரிக்கெட் பேட்டால் கௌதமை நையப் புடைத்தனர். கூட ப்ரியாவின் மாமாவும் சேர்ந்து கொள்ள அடி தாங்க முடியாமல், ரத்தச் சகதியோடு தப்பி வந்தான் கௌதம்.

அவனது நண்பன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கௌதமைக் கூட்டிக் கொண்டு போக அட்மிட் செய்ய மறுத்து விட்டார்கள். பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.கௌதம்முதுகு தண்டு வடம் உடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

இதே வேளையில், பொள்ளாச்சி கிழக்கு நகரப் போலீசார், அடித்த மூவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவினாசி சிறையில் அடைத்து விட்டனர்.இந்த நிலையில் இன்று காலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான் கௌதம்.

கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு ப்ரியாவின் உறவுகள் சிறைக்குள் தவிக்கின்றன.

pollachi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe