பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில் உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மீது தடி வீசியதால் தவறி விழுந்து காயம் அடைந்தனர்.

pollachi incident

Advertisment

பொள்ளாச்சி கோட்டூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோட்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் கோட்டூர் பகுதிக்குட்பட்ட சங்கம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த மூன்று இளைஞர்கள் ஆக்சல், அன்வர், சர்தார் அலி ஆகியோர்ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த போது சம்பந்தம் சிறப்பு உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றார். அப்போது இளைஞர்கள் வண்டியை நிறுத்தாமல் சென்றதால், கையில் இருந்த தடியை வீசியபோது வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.

Advertisment

இதில் பலத்த காயத்துடன் இருந்தவர்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் காவல்துறையினரின் அத்துமீறலை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து டி.எஸ்.பி.விவேகானந்தன் தலைமையில் விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.