Advertisment

கல்லூரி மாணவ , மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்! 

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல் அருகே உள்ள பிரபல கல்லூரியான பிஎஸ்என்ஏ கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்தனர்.

Advertisment

c

கோவை அருகே உள்ள பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை காதல் வசப்படுத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

.

இந்த நிலையில் இப்பிரச்சனையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவுடன் மட்டுமல்லாமல் இந்த வழக்கை சிபிசிஐடிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

Advertisment

c

அப்படியிருந்தும் தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகளில் மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்து வருகிறார்கள். அதுபோல் திண்டுக்கல் அருகே உள்ள பிரபல கல்லூரியான பிஎஸ்என்ஏ கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்து இச்சம்பவத்தில் தொடர்புடைய அந்த வெறிபிடித்த நான்கு பேருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இந்த விஷயம் மாவட்டத்தில் உள்ள மற்ற கல்லூரி மாணவ மாணவிகளின் காதுக்கு எட்டியதின் பெயரில் அந்த மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்.

pollachi college kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe