pollachi cbi arrested more three persons dmk kanimozhi mp tweet

அ.தி.மு.க.வினர் உட்பட மூன்று பேரைக் கைது செய்து, தி.மு.க. கூற்று உண்மை என்பதை உறுதிசெய்துள்ளது சி.பி.ஐ. என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Advertisment

பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமைவழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹெரென் பால், பாபு ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Advertisment

pollachi cbi arrested more three persons dmk kanimozhi mp tweet

இது தொடர்பாக கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், 'பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, தி.மு.க. தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, அ.தி.மு.க. மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அ.தி.மு.க.வினரையும், சி.பி.ஐ. இவ்வழக்கில் கைது செய்துள்ளது, உறுதி செய்துள்ளது. எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.