POLLACHI CASE COIMBATORE DISTRICT MAHILA COURT CBI OFFICERS

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், கோவை மகளிர் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்களை அடைத்து வைத்து சித்ரவதைச் செய்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ. விசாரித்து வரும் இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீது ஏற்கனவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதே வழக்கில், அருளானந்தம், ஹெரான்பால், பாபு ஆகிய மூன்று பேர் கடந்த ஜனவரி மாதத்திலும், அருண்குமார் என்பவர் இந்த மாதத்திலும் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இந்த நிலையில், அண்மையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் சேர்த்து, கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (27/08/2021) தாக்கல் செய்தனர். கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.