Advertisment

''ஸ்டாலின் போதிக்க வேண்டியது திமுகவினருக்கு தான்''-அமைச்சர் சி.வி.சண்முகம் பாய்ச்சல்!!

minister cv shanmugam press meet

Advertisment

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம்செய்தியாளர்கள் சந்திப்பில்தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.செய்தியாளர்களிடம் பேசுகையில்,தொற்றுநோய் காலத்தில் பக்குவத்தோடு அரசியல் நடத்த வேண்டும்.சட்ட ஒழுங்கைச் சீரழித்த குற்றத்திற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஜீவகாருண்யம்,நேர்மையைப் போதிக்க வேண்டியது தி.மு.க.வினருக்குத் தான்.தமிழக காவல்துறை அரசியல் மயமாக்கப்பட்டு விட்டதாக ஸ்டாலின் கூறியுள்ளது உள்நோக்கமுடையது.

அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை சுயமாகவும்,சுதந்திரமாகவும் இருக்கிறது. உண்மைக்குப் புறம்பான செய்தியைத் தினமும் வெளியிட்டு மக்கள் மனதில் நஞ்சைப் புதைக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின். அரசியல் பகையை முன்வைத்து தி.மு.க.வினர் ஆடிவரும் ருத்ரதாண்டவத்தைஅடக்க முடியாதவர்ஸ்டாலின் எனஅமைச்சர் சி.வி.சண்முகம்தெரிவித்துள்ளார்.

stalin CV Shanmugam admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe