
மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் வரும் நவம்பர் 30 -ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன்நாளை மறுநாள், ரஜினிகாந்த ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில்பங்கேற்க, மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குத் தொலைப்பேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகதெரிகிறது. அண்மையில், ரஜினிகாந்தின் அரசியல் நிலைபாடு மற்றும் உடல்நலம் குறித்து வெளியானஅறிக்கைக்கு, அந்த அறிக்கை தன்னால்வெளியிடப்படவில்லை. ஆனால் உடல்நலம் பற்றி அதில்குறிப்பிட்டிருந்த தகவல் உண்மைதான்எனவிளக்கமளித்திருந்தார்.அதேபோல், அவர் அரசியலுக்கு வர வேண்டும் எனஅவரதுரசிகர்கள் தொடர்ந்து போஸ்ட்டர்கள் மூலம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மக்கள் மன்றநிர்வாகிகளுடன் அவர் மேற்கொள்ள இருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Follow Us