'' Politicians have no place in student issue '' - Student petition against BJP Karu Nagarajan!

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது.

Advertisment

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள நீட் ஆய்வு குழுவிடம் கருத்துகளைக் கண்டிப்பாகபதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

Advertisment

அதனையடுத்து நீட் தேர்வு ஆய்வுகுழுவுக்கு எதிராக பாஜகவின் கரு. நாகராஜன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்ற உத்தரவுபடிதான் நடத்தப்படுகிறது. எனவே அதனை எதிர்த்து முடிவெடுக்க வேண்டும் என்றால் உச்ச நீதிமன்ற அனுமதி பெற்றுதான் எந்த முடிவும் எடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறது என பாஜகவின் கரு. நாகராஜன் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அமைத்ததை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.அந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுவழக்கு திங்கட்கிழமைக்குஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நந்தினி என்ற மாணவி இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்,மாணவர்கள் பிரச்சினையில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisment

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மாணவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி தலைமை நீதிபதி அமர்விடம் முறையீடு செய்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திங்கட்கிழமை கரு. நாகராஜனின் வழக்கு விசாரணைக்கு வரும்போது அதனுடன் சேர்த்து இந்த வழக்கை விசாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.