Advertisment

வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்...

politicians - farmers-struggle- against - Amendment Act

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள, மூன்று வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல கட்சி அரசியல் தலைவர்களும், விவசாயிகளும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், அரியலூரில் உள்ளதா.பழூரில், தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் சார்பில், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள, மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறித்தியும், அதற்கு துணை போகும் ஆளும் அ.தி.மு.க அரசைக் கண்டித்தும்அனைத்துக் கட்சிகளின் சார்பில், தி.மு.க ஒன்றிய கழகச் செயலாளர் க.சொ.க.கண்ணன்தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

முன்னதாக சி.பி.எம் மாவட்ட குழு உறுப்பினர் எம்.இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் க.சர்க்கரைவர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சர்க்கரைவர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் பி.தங்கராசு, திராவிடர் கழகம் ஒன்றியச் செயலாளர் பி.வெங்கடாசலம், இந்திய ஜனநாயகக் கட்சி ஒன்றியச் செயலாளர் ஐ.ஆரோக்கியசாமி, தென்இந்திய நதிகள் இணைப்பு தேசிய விவசாயிகள் சங்க பிரதிநிதி தமிழ்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

முடிவில் ஐ.ஜெ.கே மாவட்ட தலைவர் எஸ்.செல்வநாதன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.தமிழ்செல்வன், த.நாகராசன், மாவட்ட அணித் துணை அமைப்பாளர்கள் கோவி.சீனிவாசன்,இரா.சங்கர், சி.கண்ணதாசன், கே.ஆர்.கார்த்திக், பெ.ஆறுமுகம், தொ.மு.ச மாவட்ட கவுன்சில் துணை தலைவர் த.சம்பந்தம், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் ந.கார்த்திகைகுமரன், ஜெ.ஜெயசெந்தூரன், க.சேகர், த.குணசீலன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தி.மு.ககூட்டணிக்கட்சிகள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் மத்திய மோடி அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக, திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, உடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கலந்துகொண்டார்.

politicians - farmers-struggle- against - Amendment Act

அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.மாசிலாமணி எம்.எல்.ஏ தலைமையில் மயிலம் தெற்கு வடக்கு ஒன்றியத்தின் சார்பில் விவசாய விரோத சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பா.ஜ.க மோடி அரசைக்கண்டித்து அதற்கு துணை போகும் தமிழக அ.தி.மு.க அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில், மயிலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் ஆர். சேதுநாதன், மயிலம் வடக்கு ஒன்றியச் செயலாளர் வ.மணிமாறன் மற்றும் மயிலம் வடக்கு தெற்கு நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

dmk alliance parties farm bill protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe