
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படஇருக்கிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, சி.சி.டி.வி கண்காணிப்பு கருவிகளும் பொருத்தப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் அரசியல் பேசியதாக காவலர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அங்கு பாதுகாப்பில் இருந்த தலைமை காவலர் தனவேல் என்பவர் அரசியல் பேசியதாக திமுகவினர் புகார் அளித்திருந்தனர். இதனடிப்படையில் தற்போது காவலர் தனவேல் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Follow Us