Advertisment

விஷச் சாராயம் விற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் கைது  

Political party members arrested for selling liquor in Karur

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வைகைநல்லூர் பஞ்சாயத்து, புதுப்பாளையம் பகுதியில் விஷச்சாராயம் விற்ற அதிமுகவைச் சேர்ந்த தாய், மகன் மற்றும்திமுக பிரமுகர் ஒருவர் என மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வைகைநல்லூர் பஞ்சாயத்து பகுதியில் விஷச்சாராயம் தொடர்ந்து விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

Advertisment

அப்போது, புதுப்பாளையம் எம் ஜி ஆர் நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ராமு மனைவி அஞ்சலை(70), அவரது மகன் இளங்கோவன்(54) ஆகியோரது வீட்டிலும், அதுபோல புதுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் வீரமலை(57) என்பவரது வீட்டிலும் விஷச்சாராயம் விற்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த35 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

arrested police karur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe