Advertisment

காவிரி பிரச்சினையை அரசியல் கட்சிகள் உயிரோடு வைத்திருக்கவே விரும்புகின்றன: பிரகாஷ்ராஜ்

Advertisment

Prakash-Raj

காவிரி பிரச்சினையை அரசியல் கட்சிகள் உயிரோடு வைத்திருக்கவே விரும்புகின்றன என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

கர்நாடக மாநிலம் பெலகாவியில் புதன்கிழமை நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

நைல் நதி நீர் 4 நாடுகள் இடையே சுமுகமாக பங்கிட்டு வழங்கப்பட்டு உள்ளது. அண்டை நாடுகளுடன் இருக்கும் நதிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்போது, இந்தியாவில் 2 மாநிலங்களுக்கு இடையே உள்ள இந்த காவிரி பிரச்சினையை தீர்க்க முடியாதது ஏன்?.

அரசியல் தைரியம் இருந்தால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். ஒரு முறையான பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஆனால் இதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகளோ அல்லது அதன் தலைவர்களோ எடுக்கவில்லை. காவிரி பிரச்சினையை தீர்க்காமல் அதை அரசியல் கட்சிகள் உயிரோடு வைத்திருக்கவே விரும்புகின்றன. இவ்வாறு கூறினார்.

alive cauvery issue Political partie Prakashraj
இதையும் படியுங்கள்
Subscribe