கரூரில், வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு வ.உ.சி பேரவை, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கரூர் தான்தோன்றி மலையில் உள்ள அவரது சிலைக்கு இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து வ. உ.சி பேரவை, சோழிய வேளாளர் முன்னேற்றச் சங்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து வ.உ.சி யின் சுதந்திரப் போராட்ட தியாகத்தைப் போற்றும் வகையில் முழக்கம் எழுப்பினர்.அதன் பிறகு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.