Advertisment

அரசியல் உள்நோக்கமா?? தி.மு.க. விஐபியின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரின் அய்யாத்துரைப் பாண்டியன் பல ஆண்டுகளுக்கு முன்பே, காண்ட்ராக்ட் மின் அமைப்பு பணி, லாட்ஜ்கள் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளி என்று தொழில் நிறுவனங்களைக் கொண்டவர். அண்மையில் தான் தி.மு.க.வில் சேர்ந்து நேரடி அரசியலுக்குள் வந்தவர்.

Advertisment

dmk

கட்சியின் பொருட்டு தென் மாவட்டத்தில், நிகழ்ச்சிகளைத் தன் சொந்தச் செலவில் நடத்துபவர். கட்சியின் பெயரால் பல நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளார். மேலும் அவருக்கு மாநில வர்த்தகர் அணித் துணைத் தலைவர் பொறுப்பும் தரப்பட்டது. மாநில அளிவில் வர்த்தக அணி நிர்வாகிகளின் கூட்டத்திற்காக சென்னை சென்றிருந்தார். அய்யாத்துரைப்பாண்டியன்.

 Political motivation ?? DMK Income Tax Department Action Check at VIP Offices

Advertisment

 Political motivation ?? DMK Income Tax Department Action Check at VIP Offices

இன்று காலை சென்னை மற்றும் மதுரையிலிருந்து வந்த வருமானவரித்துறையினர், நெல்லையிலுள்ள அய்யாத்துரைப் பாண்டியனின் லாட்ஜ், மற்றும் சங்கரன்கோவிலில் உள்ள அவரது வீட்டில், மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் லாட்ஜ்களில் சோதனை நடத்தினர்.

இதனிடையே சென்னையிலிருந்த அய்யாத்துரைப் பாண்டியனுக்த் தகவல் தரப்பட அவர் வந்து கொண்டிருக்கிறாராம்.

 Political motivation ?? DMK Income Tax Department Action Check at VIP Offices

இது குறித்து அய்யாத்துரைப் பாண்டியனின் உதவியாளரிடம் பேசிய போது,காலை 10 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர் மதியத்திற்குள் முடித்து விட்டார்கள். அதில் எதுவும் சிக்கவில்லை. அனைத்தும் முறையாக உள்ளன. பல வருடங்களாகத் தொழில் செய்து வருவதால், கணக்குகள் தேக்கமின்றி வருமான வரித்துறையினாரால் வருடம் தோறும் தணிக்கை செய்ப்பட்டும் வருகிறது. தவிர அரசியல் உள்நோக்கமிருக்கும் என்றே கருத வேண்டியதுள்ளது என்கிறார்.

it raid thenkasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe